இரவு நேரத்தில் பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமிக்கு.... தையல் கடைக்குள் நடந்த கொடூரம்! 56 வயது தையல்காரரின் வெறிச்செயல்..!!!
டெல்லி சதர் பஜார் பகுதியில் பேனா வாங்குவதற்காக இரவு நேரத்தில் வெளியே சென்ற 11 வயது சிறுமிக்கு கொடூரம் நேர்ந்துள்ளது. சிறுமியை தனியாக பார்த்த 56 வயது தையல்காரர் அவரை தனது கடைக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மக்சூத் என்பவரை கைது செய்துள்ளனர்.
பேனா வாங்கச் சென்ற சிறுமி
6-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு 11 மணியளவில் வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு பேனா வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவரை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த தையல்காரர் மக்சூத், ஆசைவார்த்தை கூறி சிறுமியை தனது தையல் கடைக்குள் அழைத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்கிட்டயே உன் ஆட்டத்தை காட்டுறியா...! நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு நாகங்கள்...! இறுதியில் நடந்த அந்த திகில் காட்சியை நீங்களே பாருங்க..!!!
தையல் கடைக்குள் கொடூரம்
கடைக்குள் அழைத்துச் சென்ற பின்னர் சிறுமியின் கை, கால்களை கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி, வீட்டிற்கு ஓடிச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.
POCSO சட்டத்தில் கைது
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டெல்லி வடக்கு மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கினர். POCSO சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மக்சூத் கைது செய்யப்பட்டார். மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் தொடர்பான பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மக்சூத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: SeeEx நேரலையிலையே இப்படியா? இரவில் பிரபல ஸ்டீரீமர் டிரைகோ பெண்ணை அடித்து, பால் பாட்டிலால் தாக்கிய கொடூரம்! தீயாய் பரவும் வீடியோ..!!!