இளம் ஜோடி! அம்மா அப்பா இல்லை! திடீரென நெஞ்சை பிடித்து விழுந்த கணவர்! பதறிய மனைவி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!



young-record-keeper-dies-heart-attack-meerut

உத்திரப் பிரதேசம் மெரட் மாவட்டத்தில் சோகமூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கலெக்டரேட்டில் இங்கிலீஷ் ரெக்கார்ட் கீப்பராக பணியாற்றி வந்த 29 வயதான இஷாந்த் சிங், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு, தாயின் மரணத்துக்குப் பிறகு மரண ஒதுக்கீடு வாயிலாக அரசு வேலை கிடைத்தது.

இந்நிலையில் வருகிற ஜூலை 22ஆம் தேதி தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள நிலையில், இந்த திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திங்கள்கிழமை காலை 6 மணியளவில் குளிக்கச் சென்ற இஷாந்த், இரண்டாவது மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட அவரது மனைவி, அக்கம்பக்கத்தவரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! கவனக்குறைவால் இரு பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..

தாயும் தந்தையும் மறைந்த நிலையில், இப்போது அவரது மனைவி மட்டுமே குடும்பத்தில் இருக்கிறார். இளமையில் இஷாந்த் உயிரிழந்தது அவரது மனைவி மற்றும் உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியரும் பிற அதிகாரிகளும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். இளவயதில் ஏற்பட்ட இரட்டை மாரடைப்பு மரணம், உடல்நலத்தை தவறவிடாமல் கவனிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: கோவிலில் திருட வந்தவரை தூங்க வைத்த சாமி! மறுநாள் திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ...