மகளின் பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டாமாக நடத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! வைரல் வீடியோ....
பரிதாபமாக உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ்.! இயக்குனர் பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு!! ஏன்??

நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவன்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று சண்டைக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளது. கார் சேஸிங் போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த காட்சியில் சண்டைப் பயிற்சியாளரான 52 வயது நிறைந்த மோகன்ராஜ் என்பவர் காரை ஓட்டிவந்து டைவ் அடித்துள்ளார். அப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டு அவர் காரின் உள்ளேயே மயக்கம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்டு படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன்ராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பின்பு போலீசார் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், சண்டைக் கலைஞர் வினோத், கார் உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது கவன குறைவு அல்லது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
இதையும் படிங்க: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!