உலகம் லைப் ஸ்டைல்

10 வருடம் பிடிவாதமாக இருந்த பெண்!! கடைசியில் ரோடு போட அதிகாரிகள் எடுத்த வித்தியாசமான முடிவு!! வைரல் சம்பவம்..

Summary:

சீனாவில் வீட்டைசுற்றை பாலம் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவில் வீட்டைசுற்றை பாலம் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக அந்நாட்டு அரசு  தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்களும் சாலை அமைப்பதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகளை  காலி செய்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த ஒரே ஒரு பெண் மட்டும் பிடிவாதமாக தனது வீட்டை காலி செய்யமுடியாது என வலுக்கட்டாயமாக இருந்துள்ளார். இடத்திற்கு பதில் இரண்டு மடங்கு பணம் அல்லது, 2 பிளாட் இப்படி பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறியும் அந்த பெண் அங்கிருந்து காலி செய்வதாக இல்லை.

இப்படியே 10 ஆண்டுகள் போராட்டம் நீடித்துவந்தநிலையில், அந்நிறுவனமும் மற்ற இடங்களில் சாலையை அமைத்தே முடிந்துவிட்டது. ஆனால் அந்த பெண்மணியின் வீட்டைமட்டும் காலி செய்து, அந்த இடத்தில் சாலை அமைக்க முடியவில்லை.

இதனால் வித்தியாசமான முடிவுக்கு வந்த அந்நிறுவனம், அப்பெண்ணின் வீட்டை சுற்றி செல்லும்படி பாலம் அமைத்து சாலை போட்டுள்ளனர். ஒருவழியாக சாலை அமைக்கும் பணி முடிந்து, சமீபத்தில் இந்த சாலையில் திறப்பு விழா நடைபெற்றது. 

மேலும், இரண்டு சாலைகளுக்கு நடுவே இருக்கும் அந்த வீட்டிற்கு ‘நெயில் ஹவுஸ்’ (Nail House) என பெயரும் வைத்துள்ளனர். இரு சாலைகளுக்கு நடுவே அமைந்துள்ள வீட்டை பார்ப்பதற்காகவே அந்த வழியாக மக்கள் பலர் வருகின்றனர்.


Advertisement