உலகம் லைப் ஸ்டைல்

திருமணத்திற்காக ஆவலுடன் நின்ற ஜோடி.. திடீரென வெளியான 20 வருட ரகசியம்!! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..

Summary:

சமீபத்தில் சீனாவில் நடந்த திருமணம் ஒன்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

சமீபத்தில் சீனாவில் நடந்த திருமணம் ஒன்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

சீனாவின் ஜியாங்க்சு (Jiangsu) பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு பெண் பார்த்துள்ளார். கடைசியா ஒரு பெண்ணை தேடி பிடித்து, இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று திருமண நாளும் நெருங்கியது. இந்நிலையில் மணமக்கள் இருவரும் திருமண உடையணிந்து தங்கள் முறைப்படி திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர்.

திருமணம் நடக்க சில நிமிடங்களே இருந்தநிலையில், மணப்பெண்ணின் அருகில் நின்றுகொண்டிருந்த மாப்பிளையின் தாய், மணமகளின் கையில் பிறப்பு அடையாளம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். உடனே மணப்பெண்ணின் பெற்றோரை கூப்பிட்டு, இவர் உண்மையிலேயே உங்கள் மகளா? மணப்பெண்ணின் உண்மையான பெற்றோர் யார் என கேட்டுள்ளார்.

மாப்பிள்ளையின் அம்மா இப்படி திடீரென கேட்பதை சற்றும் எதிர்பார்க்காத பெண்ணின் பெற்றோர் உண்மையை கூறியுள்ளனர். அதாவது, பல ஆண்டுகளுக்கு முன், சாலையோரத்தில் கிடந்த பெண் குழந்தையை தாங்கள் எடுத்து வளர்த்ததாக தெரிவித்தார்.

அப்போதுதான் மாப்பிள்ளையின் தாயாருக்கு அந்த மணப்பெண் வேறு யாரும் இல்லை, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்துபோன தனது மகள்தான் என்பது தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மகள் தொலைந்துபோனதையும், அவரது கையில் இருந்த பிறப்பு அடையாளத்தையும் கூறியதை கேட்டு மணப்பெண் தனது உண்மையான தாயரை கட்டி அனைத்து கண்ணீர் சிந்தினார்.

இதனால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் மாப்பிளை தற்போது பெண்ணிற்கு அண்ணன் முறை வருவதால், எப்படி இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியும் என அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அப்போதுதேன் மேலும் ஒரு ட்விஸ்டை ஓப்பன் செய்தார் மாப்பிள்ளையின் தாய்.

ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகளை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இந்த பையனை தத்தெடுத்து வளர்த்ததாகவும், எனவே இருவரும் ஒருதாய் பிள்ளை இல்லை என்பதால் திருமணம் செய்துவைக்க எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் இதெல்லாம் நிஜமா அல்லது சினிமா படப்பிடிப்பு எதுவும் நடக்கிறதா என ஒருநொடி ஆச்சரியப்பட்டனர். தற்போது நிச்சயித்தபடி தனது மகளை தனது வளர்ப்பு மகனுக்கே திருமணம் செய்துவைத்து மகளை மருமகள் ஆக்கிவிட்டார் அந்த தாய்.


Advertisement