அய்யய்யோ... காற்றில் தொங்கியப்படி சாகசம் செய்த நடிகை! திடீரென கை நழுவி 10 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சி! அலறித் துடித்த மக்கள்... திக் திக் காட்சி..!!!
சீனாவின் குவாங்சோ பகுதியில் உள்ள லின்க்சியன் பூங்காவில் செப்டம்பர் 26-ம் தேதி இரவு நடைபெற்ற வான்வெளிச் சாகச நிகழ்ச்சியில் பெண் நடிகை ஒருவர் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து திடீரென கீழே விழுந்தார். ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாகச நிகழ்ச்சியில் நழுவிய பிடி
பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சாகச அரங்கில் நிலவை மையமாகக் கொண்ட “ஹேங்-இ” என்ற பாரம்பரிய வான்வெளி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. காற்றில் தொங்கியபடி பெண் நடிகை சாகசம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது பிடி நழுவியது. இதனால் அவர் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
நடிகை உயரத்தில் இருந்து விழுந்ததை நேரில் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலேயே பரபரப்பான சூழல் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
நிகழ்ச்சியின்போது பதிவானதாகக் கூறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அவற்றில் நடிகை உயரத்தில் சாகசம் செய்யும் காட்சிகளும், பின்னர் கீழே விழும் தருணமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உயரத்தில் இருந்து விழுந்த பெண் நடிகையின் தற்போதைய உடல்நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பான தகவலும் உறுதி செய்யப்படவில்லை.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை
தகவல் அறிந்த உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்ததா, நடிகை கீழே விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் மற்றும் நடிகையின் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nữ diễn viên Quảng Châu bất ngờ rơi từ độ cao! Tối ngày 26 tháng 9, tại Vườn Ấn Tượng Lĩnh Nam ở Quảng Châu, trong một buổi biểu diễn trên không “Hằng Nga chạy trăng”, nữ diễn viên rơi từ độ cao hơn mười mét, khiến khán giả sợ hãi kinh hoàng, đồng… pic.twitter.com/DeU34mjIxP
— Lê Thị Hồng Bích (@LThHngBch2) September 27, 2026