பார்க்க பாவமா இருக்கு! வேலையை விட்டு நீக்கி முழு பணம், விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்த முதலாளி! விடாமல் விழுந்து கெஞ்சிய பணிப்பெண்... வைரலாகும் வீடியோ!!!
வீட்டுப் பணியாளர்களிடம் முதலாளிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் எழுந்துள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு பதிவு இதற்கு காரணமாகியுள்ளது. இதனிடையே, பணிப்பெண்ணை வேலையில் இருந்து நீக்கிய பெண், அவருக்குச் சேர வேண்டிய பணத்தை வழங்கியதுடன், சொந்த ஊர் செல்ல விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்த சம்பவம் தொடர்பான வீடியோவும் பேசுபொருளாகியுள்ளது.
வீட்டுப் பணியாளர்களிடம் எல்லை அவசியமா?
எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவில், வீட்டுப் பணியாளர்களிடம் அளவுக்கு அதிகமாக அன்பாகவும் நெகிழ்வாகவும் நடந்து கொண்டால், சிலர் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பணியில் அலட்சியம் காட்டத் தொடங்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். பணியில் தேவையான கட்டுப்பாடுகளையும் தெளிவான எல்லைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: நூறு கோடியில் ஒரு வாய்ப்பு! வெவ்வேறு திசைகளில் பயணித்து சென்ற தந்தை- மகன்..! நடுக்கடலில் நடந்த அந்த க்ளைமாக்ஸ் சீன்... நெகிழ்ச்சி வீடியோ..!!!
பணப்பலன்களுடன் விமான டிக்கெட்டும் ஏற்பாடு
இதற்கிடையே, தனது தாயிடம் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டதாகக் கூறி ஒரு பணிப்பெண்ணை அந்தப் பெண் வேலையில் இருந்து நீக்கியுள்ளார். ஆனால், அவருக்குச் சேர வேண்டிய பணப்பலன்களை முழுமையாக வழங்கியதுடன், சொந்த ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டையும் பதிவு செய்து கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பணிப்பெண் கெஞ்சும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரியா, தவறா என்பது குறித்து இணையவாசிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
வீடியோ வெளியிட்டது குறித்து இருவேறு கருத்துகள்
சிலர், வீட்டுப் பணியாளர்களிடம் உரிய எல்லைகளைப் பேணுவதும் பணியில் தேவையான கண்டிப்புடன் இருப்பதும் அவசியம் என ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், வேலை தொடர்பான பிரச்சினை எதுவாக இருந்தாலும் ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது சரியல்ல என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், வீட்டுப் பணியாளர்களுடனான பணிச்சூழலில் உரிய மரியாதை, தெளிவான விதிமுறைகள் மற்றும் தனியுரிமை ஆகியவை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.
From my own experience, sometimes being too kind and flexible with maids/helpers makes them start taking that kindness for granted. The moment you become a little strict and set clear boundaries, they somehow start respecting them. Of course, not everyone is like this, but I’ve… pic.twitter.com/FsjtiZ70dM
— Sonel (@allthingzabsurd) September 26, 2026
இதையும் படிங்க: அதிவேகமாக வந்த பைக் எதிரே வந்த வேனில் மோதி.... தூக்கி வீசப்பட்ட ட்ரைவர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க.... குலை நடுங்க வைக்கும் காட்சி!!!