ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
அதிவேகமாக வந்த பைக் எதிரே வந்த வேனில் மோதி.... தூக்கி வீசப்பட்ட ட்ரைவர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க.... குலை நடுங்க வைக்கும் காட்சி!!!
வேகமாக சென்ற பைக் எதிரே வந்த வேன் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பைக் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக வேனுக்குள் பாய்ந்து விழுந்தார். இதனால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
வேன் மீது மோதிய பைக்
வீடியோவில், ஒருவர் பைக்கில் வேகமாக சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரே வந்த வேன் மீது பைக் நேருக்கு நேர் மோதுகிறது. மோதிய வேகத்தில் பைக் பலத்த சேதமடைந்தது.
அதே நேரத்தில், பைக்கில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டு வேனின் உள்ளே பாய்ந்து விழுகிறார். வழக்கமாக இதுபோன்ற மோதல்களில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி
விபத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அந்த நபருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோதலுக்குப் பிறகு பைக் சேதமடைந்தது. விபத்து தொடர்பான முழுமையான இடம் மற்றும் காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
எதிர்பாராத வகையில் நபர் வேனுக்குள் பாய்ந்து விழும் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
A terrifying incident, yet thankfully, those involved managed to walk away on their own and no serious injuries were reported.
— The Nalanda Index (@Nalanda_index) September 9, 2026
Sometimes, a few seconds can make the difference between a close call and a tragedy. Stay alert, follow safety rules, and never take road safety… pic.twitter.com/P229QRapaK
இதையும் படிங்க: வெள்ளத்துக்கு நடுவே குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிய வாலிபர்! திக் திக் காட்சி..!!!