உலகம்

பால் பாத்திரத்திற்குள் சிக்கிய குழந்தையின் ‌தலை! பதறிப்போன குடும்பத்தினர்!

Summary:

child head stuck in milk Vessel

சீனாவில் பால் பாத்திரத்திற்குள் தலை சிக்கிக் கொண்டது. நீண்டநேரம் போராடி பாத்திரத்திடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்திலுள்ள சாங்ஷா‌ நகரில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை பால் பாத்திரத்திற்குள் தலையை விட்டுள்ளது. பின்னர் தலையை எடுக்கமுடியாமல் குழந்தை அலறல் சத்தம் போட்டுள்ளது.

அப்போது குழந்தையின் பெற்றோர் வந்து பார்த்தபோது குழந்தையின் தலை முழுவதும் பாத்திரத்திற்குள் சிக்கிக்கொண்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தீயணைப்புத்துறையினருக்கு தக‌வல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் நீண்டநேரம் போராடி அந்த பாத்திரத்தில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பால் பாத்திரத்திற்குள் தலையை விட்டு குழந்தை சிக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Advertisement