பள்ளியில் சரமாரி துப்பாக்கிசூடு.. 10 பேர் பரிதாப பலி.. உலகத் தலைவர்கள் கண்டனம்.!
பள்ளியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 10 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், தம்ப்ளர் ரிட்ஜ் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய நபர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். பள்ளி வளாகத்தில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூடு அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
10 பேர் பலி:
போலீஸ் தகவலின்படி, பள்ளி வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் அங்கேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதே சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! தெலுங்கானா மாநில அரசு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்க 24 ஆக உயர்வு! சாலையில் சிதறி கிடக்கும் உடல்கள்....!!

காவல்துறை விசாரணை:
இந்த தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையாக காயமடைந்த சிலர் ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் சிறப்பு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த துயரச் சம்பவத்திற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கனடா மக்களிடம் வருத்தம் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொத்து கொத்தாக பலி.. அதிர்ச்சி சம்பவம்.!