புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொத்து கொத்தாக பலி.. அதிர்ச்சி சம்பவம்.!
உலகம் முழுதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், சுவிட்சர்லாந்தின் பிரபலமான Le Constellation பகுதியில் ஒரு விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து அடர்ந்த கரும்புகை வானில் பரவியதால், சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகை மூட்டத்தில் மூழ்கின. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க பல மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை மேலும் 100-ஐ தாண்டி அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்ட நாளில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.