உலகம்

சிறிதும் தயக்கமின்றி, தாயின் கண்முன்னே மகன் செய்த விபரீத செயல்! துடிதுடித்த தாய்! வெளியான பதறவைக்கும் வீடியோ !

Summary:

boy jump from tall building to check his homemade parachute

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரில் வசித்து வந்த பாக்தான் பிர்சோவ்  என்ற 15 வயது சிறுவன் ,தானே வீட்டில் பாராசூட் ஒன்றை தயார் செய்தான்.

பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்து ,14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.

மேலும் தனது மகனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பலரும் அங்கு குவிந்து, அந்த சிறுவனை உற்சாகப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும்உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்து தனது பாராசூட்டை இயக்கியுள்ளான்.

ஆனால் அந்த பாராசூட் சரியான முறையில் இயங்காததால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதை கண்ட அவனது தாய் துடிதுடித்து போனார்.


இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 


Advertisement