சாதாரண வலிதானேனு மருத்துவமனைக்கு போன இளைஞர்.. ஒரே ஒரு பரிசோதனையில் வாழ்க்கையே மாறியே சம்பவம்



Boy announces pregnancy after discovery of female reproductive organs

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டநிலையில் மருத்துவனை சென்ற இளைஞர் ஒருவர் பெண்ணாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கி சானல். இவருக்கு சிறுநீர் கழிக்கும்போது அவ்வப்போது வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மைக்கி சானல் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருக்கட்டத்தில் அவருக்கு வலி அதிகமானதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சோதனைக்கு சென்றுள்ளார்.

மைக்கி சானலை சோதித்த மருத்துவர்கள் முதலில் ஏதாவது ஒவ்வாமை அல்லது சிறு நீர் கல் போன்றவையாக இருக்கலாம் என நினைத்துள்ளனர். பின்னர் சந்தேகத்திற்காக அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

Viral New

ஆம் மைக்கி சானலின் வயிற்றுக்குள் பெண்களுக்கான கர்ப்பப்பை மற்றும் பெண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகளும் இருந்துள்ளது. மருத்துவர்களே இந்த ஆச்சரியத்தில் இருந்து வெளியேவராதநிலையில் இதுகுறித்து மைக்கி சானலிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முதலில் மைக்கி சானல் இதனை நம்ம மறுத்துள்ளார். மருத்துவர்கள் தன்னிடம் விளையாடுவதாக அவர் நினைத்துள்ளார். பின்னர் அனைத்து பரிசோதனை முடிவுகளையும் காண்பித்தபிறகு மைக்கி சானல் அதை நம்பியுள்ளார்.

இதனை அடுத்து மருத்துவர்கள் மைக்கி சானலிடம் இருக்கும் இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் மைக்கி சானல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். என்னதான் நான் ஒரு ஆணாக வளர்ந்துவந்தாலும் அவ்வப்போது நான் ஒரு பெண்ணாக இருப்பேனோ என்ற சந்தேகம் தனக்கு வந்துள்ளதாகவும், பெண்ணாக இருப்பது ஒரு வரம் எனவும் கூறி அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மைக்கி சானல்.

Viral New
 
அதுமட்டும் இல்லாமல், மைக்கி சானல் ஒரு குழந்தையை கருவில் சுமக்க முடியும் என்பதால் தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து செயற்கை கருவூட்டல் முறையில் மைக்கி சானல் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தாலும், அவருக்கு பெண்ணுறுப்பு இல்லை என்பதால் சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.