ஆமைக்கு நடந்த ஆபரேஷன்..! விஞ்ஞானிகள் செய்த தரமான சம்பவம்..! சுவாரஸ்யமான தகவல்..! - TamilSpark
TamilSpark Logo
உலகம் மருத்துவம் டெக்னாலஜி

ஆமைக்கு நடந்த ஆபரேஷன்..! விஞ்ஞானிகள் செய்த தரமான சம்பவம்..! சுவாரஸ்யமான தகவல்..!

தாய்லாந்து நாட்டில் மீனவர்களின் வலையில் கால்களை இழந்த ஆமை ஓன்று சிக்கியுள்ளது. ரிட்லி என்ற இனத்தை சேர்ந்த அந்த அரியவகை ஆமைக்கு முன்னங்காலில் அடிபட்டு நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் அறிந்த பாங்காங்கில் உள்ள சுலாலாங்கர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் இணைந்து ஆமைக்கு செயற்கைக் காலைப் பொருத்த முடிவு செய்தனர்.

இதனை அடுத்து ஆமைக்கு நடந்த அறுவை சிகிச்சையில் ஆமைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. செயற்கை கால் பொருத்திய பிறகு ஆமை தற்போது சிரமம் இன்றி இருப்பதாகவும், தற்போது மகிழ்வுடன் நீந்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் முட்டை விட சிரமப்பட்ட கரப்பான் பூச்சி ஒன்றுக்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo