
america transgender attacked in school
அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருபவர் சீஸ் டால் என்ற திருநங்கை, கடந்த 28ம் தேதியன்று பெண்கள் கழிப்பறைக்கு சென்று உபயோகப்படுத்தியுள்ளார்.
அப்போது அங்கு பெண் ஆசிரியையுடன் வந்த மற்ற ஆசிரியர்கள், உபயோகப்படுத்தி கொண்டிருந்தபோதே, ஒரு குச்சியினை கொண்டு கழிப்பறையின் கதவுகளை திறந்து வெளியில் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்த திருநங்கை கூறுகையில், தான் ஒரு திருநங்கை என்பதாலே தன்னை பெண்கள் கழிவறையில் இருந்து வெளியேற்றுவதை போல் கருதுவதாக தெரிவித்திருந்தார்.
அந்த திருநங்கை வெளியிட்ட வீடியோ அதிகப்படியான பாரவையாளர்களை கடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கூறுகையில், எங்களுடைய பள்ளியில் எந்த ஒரு மாணவரும், எந்த நேரத்திலும், எந்த கழிவறையையும் பயன்படுத்த தடையில்லை என்பது முக்கியமான ஒன்று.
பாதுகாப்பு பணிகள், சுகாதார பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை சந்தித்துள்ளதாக பள்ளி நிர்வாகத்திற்கு புகார் வந்ததை அடுத்து தான் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், தனியுரிமை காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட மாணவர் சம்பந்தப்பட்ட குறித்த விவரங்களை என்னால் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement