12 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி.. அல்-கொய்தா தலைவனை வேரறுத்த அமெரிக்கா..!america-killed-ai-qaeda-leader-ayman-al-zawahiri

பல ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்த தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டுள்ளான்.

ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா - தலிபான்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2011-ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த பயங்கரவாத இயக்க தலைவனை அமெரிக்கா போட்டுத்தள்ளியுள்ளது.

America

அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அய்மான் ஒசாமா பின்ளேடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.