அரசியல் உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்.! கெத்து காட்டிய ஜோ பைடன்.!

Summary:

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி ஆகியுள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபராக முடியும் என்ற நிலையில், இந்தநிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோரின் இரு கட்சிகளுக்கிடையே போட்டி நீடித்து வருகிறது. நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஜன நாயக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தார்.   

3 நாள்களாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்து வருகின்றன. அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில், வெற்றி பெற 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 284 வாக்குகளை பெற்றுள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி ஆகியுள்ளது.


Advertisement