சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அட.. ஆச்சர்யமாக இருக்கே! வானத்தில் மொத்தம் 29 நிலா இருக்குதா.? யுரேனேஸ் கிரகத்தை சுற்றி வரும் புதிய நிலா! நாசா விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு....
விண்வெளி உலகில் மனித அறிவை மேலும் விரிவாக்கும் வகையில், புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்திய ஆய்வில், யுரேனஸைச் சுற்றி புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாசா மற்றும் கனடா இணைந்த பணி
உலகின் முன்னணி விண்வெளி நிறுவமான நாசா, கனடா விண்வெளி நிறுவத்துடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பல்வேறு விண்வெளிக் காட்சிகளை மிகத் தெளிவாகப் பதிவு செய்து வரும் இந்த தொலைநோக்கி, தற்போது யுரேனஸ் கிரகத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
புதிய நிலா கண்டுபிடிப்பு
முன்னதாக யுரேனஸுக்கு 28 நிலாக்கள் இருப்பதாக அறிவியல் உலகம் தெரிவித்திருந்தது. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வில், யுரேனஸைச் சுற்றி மேலும் ஒரு புதிய நிலா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலாவுக்கு தற்போது பெயர் சூட்டப்படவில்லை; விரைவில் நாசா அதிகாரப்பூர்வமாக பெயரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாபா வங்கா கணிப்பின்படி பேரழிவு 82% உறுதி! இனி நடக்கப்போவது என்ன? அதிர்ச்சியில் மக்கள்...
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற்றம்
இந்த புதிய கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இது யுரேனஸின் மர்மங்களை மட்டும் அல்லாது, அண்டத்தின் பிற புதிர்களையும் தீர்க்க உதவும் ஒரு முக்கிய அடியெடுப்பாகும்.
இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள், மனிதகுலம் விண்வெளியை மேலும் நெருக்கமாக புரிந்துகொள்ள வழிவகுத்து, எதிர்கால ஆராய்ச்சிகளுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.
இதையும் படிங்க: ஏலியன்கள் நவம்பர் மாதம் பூமிக்கு வருகிறதா? 700 கோடி ஆண்டுகள் பழமை! வருவதால் பூமிக்கு தீங்கு விளைவிக்குமா? விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்....