ஏலியன்கள் நவம்பர் மாதம் பூமிக்கு வருகிறதா? 700 கோடி ஆண்டுகள் பழமை! வருவதால் பூமிக்கு தீங்கு விளைவிக்குமா? விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்....



alien-mystery-space-object-heading-towards-earth

ஏலியன்கள் உண்மையில் உள்ளனவா? என்ற கேள்வி இன்றும் உலகெங்கும் ஆர்வமும் அதிர்ச்சியையும் உருவாக்கும் விவாதமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பூமியை நோக்கி வரும் ஒரு மர்ம விண்வெளி பொருள் காரணமாக, அந்த விவாதம் மீண்டும் புதிய உச்சிக்கே சென்றுள்ளது.

வானியல் குழுவின் புதிய கண்டுபிடிப்பு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பிரிவில் பணியாற்றும் பிரபல வல்லுநர் அவி லோயப் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த மர்ம விண்வெளி பொருளை "3I/அட்லஸ்" எனப் பெயரிட்டு குறிப்பிடுகின்றனர். இது சுமார் 10 முதல் 20 கி.மீ அகலம் கொண்டதாகவும், விநாடிக்கு 60 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சூரியனைச் சுற்றி அதன் இயக்கம்

இது நவம்பர் மாதத்தில் சூரியனை நெருங்கும் போது பூமியில் இருந்து காண முடியாததாக இருக்கும். ஆனால், டிசம்பர் மாத ஆரம்பத்தில் சூரியனின் மறுபுறம் இருந்து மீண்டும் காணப்படத் தொடங்கும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு உற்சாக செய்தி.. லேப்டாப், டேப்லெட், கல்விக்கடன் வசதிகள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.!

பழமைவாய்ந்த இயற்கையா? செயற்கை அமைப்பா?

இந்த பொருள் சூரிய மண்டலத்தை விட 700 கோடி ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் நகரும் இது, இயற்கையானதா அல்லது ஏலியன்கள் உருவாக்கிய advanced technology-யைச் சேர்ந்த செயற்கை அமைப்பா என்பதில் சந்தேகம் எழுகிறது.

முதல்முறையாக கண்டறியப்பட்ட இடம்

சிலியின் ரியோ ஹர்டாடோ பகுதியில் அமைந்துள்ள தொலைநோக்கியின் உதவியால், இந்த பொருள் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, பல்வேறு வானியல் ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பூமிக்கான அபாயங்கள்?

இந்த மர்ம விண்வெளி பொருள் உண்மையாகவே ஏலியன்களின் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தால், அது நவம்பர் மாதத்துக்குள் என்ன செயல்பாடுகளை மேற்கொள்ளும்? பூமிக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்குமா? என்பதைக் கவனிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மனிதர்கள் எப்போதும் பரபரப்புடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த மாதிரி நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. அடுத்த பரிணாமம் எப்போது என்ற ஆவலுடன் உலகம் முழுவதும் மக்கள் காத்திருக்கின்றனர்.

 

இதையும் படிங்க: ஜூலையில் சுனாமி தாக்குதல்! ரியோ டாட்சுகி கணிப்பால் ஜப்பானில் விமான முன்பதிவு வீழ்ச்சி! பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்! அச்சத்தில் மக்கள்...