ஸ்கைப் பயனர்களுக்கு ஷாக் செய்தி வெளியிட்ட மைக்ரோசாப்ட்.. விபரம் உள்ளே.!



Microsoft Skype Ends Service 2025 May 

 

அலுவலக பணிகளில் இருப்போர், தொலைதூரத்தில் இருந்து தகவலை நேரடியாக பரிமாற விரும்புவோரின் வசதிக்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் ஸ்கைப் செயலியை அறிமுகம் செய்திருந்தது.

கடந்த 2003 ம் ஆண்டு முதலில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் செயலி, பாதுகாக்கப்பட்ட வீடியோ அழைப்புகளுக்கு பெயர்பெற்று இருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் நிறுவனங்கள் முதல் தனிநபர்கள் வரை என 50 மில்லியன் பயனர்களை ஸ்கைப் நிறுவனம் கொண்டிருந்தது. 

டீம்ஸ் செயலி பயன்பாடு

இந்நிலையில், ஸ்கைப் செயலி சேவை வரும் மே மாதம் 05 ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2017 மார்ச் மாதத்தில் மைக்ரோசாப்டின் டீம்ஸ் (Microsoft Team) செயலி பல்வேறு அம்சத்துடன் களமிறக்கப்பட்டது.

டீம்ஸ் செயலியில் ஸ்கைப்பை விட பல்வேறு புதிய வசதிகள் மேம்படுத்தி கொடுக்கப்பட்டன. குறிப்பாக கொரோனா காலத்தில் டீம்ஸ் செயலி அலுவலக பணியில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய உதவியை செய்தது. இதனால் டீம்ஸ் செயலி அதிகம் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஸ்கைப் சேவையை மைக்ரோசாப் நிறுத்தவுள்ளது. 

ஸ்கைப் சேவையை பயன்படுத்துவோர், டீம்ஸ் சேவையை அதே கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.