நட்பால் நண்பருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது! விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா அதிரடி கருத்து!
இப்படி ஒரு பொண்டாட்டியா? உன்னால் தான் எனக்கு ஆண் குழந்தை இல்லை! ஆத்திரத்தில் கணவனின் வயிற்றை கிழித்து.... வீட்டை திறந்த போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி!!!
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்தியால் தாக்கியதுடன், அவரது வயிற்றுப் பகுதியை அறுத்து உடலுக்குள் இருந்த உறுப்புகளை தனியாக எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டின் கூரையிலிருந்து குதித்து தப்பிக்க முயன்ற பெண் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூரையிலிருந்து குதித்த பெண்
குருக்ஷேத்ராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண் தனது கணவரை தாக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கணவரின் வயிற்றில் கத்தியால் குத்திய அவர், தொடர்ந்து வயிற்றுப் பகுதியை சுமார் 37 சென்டிமீட்டர் அளவுக்கு அறுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் உடலுக்குள் இருந்த சிறுநீரகம் மற்றும் குடலை தனியாக எடுத்துச் சென்று ஒரு பையில் வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியை கொடூர கொலை.. மாணவர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்.. காரணம் என்ன?
கணவரை கொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற பிம்லா, வீட்டின் கூரையிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்குள் அதிர்ச்சியளித்த காட்சி
இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அறை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்ததுடன், கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அருகில் கிடந்த ஒரு பையை சோதனை செய்தபோது அதற்குள் உடல் உறுப்புகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பையை கைப்பற்றிய அதிகாரிகள், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறு காரணமா?
பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக உயிரிழந்தவரின் சகோதரர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த குடும்பப் பிரச்சினையே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவர் கொலை தொடர்பாக பிம்லாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
குருக்ஷேத்ராவில் நடந்த கொடூரக் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட விசாரணை நடைபெறுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவுகளைத் தொடர்ந்து சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெப்சீரிஸ் பார்த்து கொள்ளை, கொலை.. தாய் - மகன் செய்யிற வேலையா இது? தெலுங்கானாவில் திடுக்கிடவைக்கும் உண்மை.!