நட்பால் நண்பருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது! விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா அதிரடி கருத்து!
கணவனா? தோழியா? 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண், திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு திடீரென வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசாரும், குடும்பத்தினரும் பிரியாவை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் நீலம் என்ற சக பெண் ஊழியருடன் சேர்ந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது. இதனை அறிந்த பிரியாவின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த வீட்டிற்குச் சென்றனர்.

இதில், பிரியாவும், நீலமும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது நண்பர்களாக பழகியதாகவும், பின்னர் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரு குடும்பத்தினரும், போலீசாரும் அவர்களை சமரசம் செய்து மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், இருவரும் ஒன்றாகவே வாழ விரும்புவதாகவும், ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கணவர் தன்னிடம் அடிக்கடி சண்டையிட்டு சரியாக நடந்துகொள்ளாததால், நீலத்துடன் வாழ்வதே தனது விருப்பம் என பிரியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு குடும்பத்தினரின் சமரச முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், சட்ட விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 3 குழந்தைகளின் தாய்... 13 வயது இளைய இளைஞருடன் காதல்! வீட்டில் சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!