உலகம் டெக்னாலஜி General

வெற்றியடையுமா கூகிளின் திட்டம்? சீனாவை கவர கூகிளின் புதிய ஆப்

Summary:

சீனாவில் எந்த ஒரு அந்நிய நாட்டு நிறுவனமும் மிக சுலபமாக காலடி எடுத்துவைக்க முடியாது. அதுவும் தகவல் தொடர்பான விஷயங்களில் சீனா மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தவகையில் கூகுள் நிறுவனத்தின் பல சேவைகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

block google க்கான பட முடிவு

இந்த வரிசையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் கூகுள் தேடல் வசதி சீனாவில் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனா இதைப்போன்ற முடிவினை எடுத்து வருகிறது.

எனினும் சீனாவில் தனது சேவையை மீண்டும் கொண்டு வர கூகிள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் சென்சார் செய்யப்பட்ட தேடல் வசதிகளை உள்ளடக்கியதாக புதிய யுக்திகளை பயன்படுத்த முனைகிறது.

தொடர்புடைய படம்

இதற்கென பிரத்யேக அன்ரோயிட் அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் கூகுள் நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.

இந்த அப்பிளிக்கேஷன் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட தகவல்களை விடுத்து ஏனைய தகவல்களை தேடிக்கொடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். இதற்கு சீனா அரசாங்கம் ஒப்புதல் அளிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement