Video: பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு! பாம்பு தப்பிக்க என்னா பண்ணுது பாருங்க! கடைசியில் என்னாச்சுன்னு தெரியுமா? திக் திக் நிமிட காணொளி...



buffalo-attacks-snake-viral-video

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு மரத்துடன் கட்டப்பட்ட எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, பின்னர் அதை விழுங்க முயற்சிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த திகிலூட்டும் நிகழ்வு, @mjunaid8335 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி, மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

வீடியோவில், நாகப்பாம்பு மெல்லிய தேகத்துடன் எருமை நோக்கி வருவது தெளிவாக தெரிகிறது. அதனை கவனித்த எருமை, தனது நாக்கால் பாம்பை நக்கி, பின்னர் வாயால் விழுங்க முயற்சிக்கிறது. சில நொடிகளில் ஏற்படும் திருப்பத்தில், பாம்பு திடீரென மரத்தின் தண்டை நோக்கி ஓடுகிறது. இது அதற்குப் பலவாக தப்பிக்க உதவியுள்ளது .ஒருவேளை பாம்பு அதை கடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. 

நபரின் செயலால் சமூக வலைதளங்களில் கோபம்

இந்த ஆபத்தான சூழ்நிலையிலும், அருகிலிருந்த நபர் வீடியோ எடுப்பதைத் தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பலர் சமூக வலைதளங்களில் கோபம் மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல நெட்டிசன்கள், “ஓர் உயிர் போனாலும் பரவாயில்லை, வீடியோ எடுக்க முக்கியமா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னொருவர், “வாழ்க்கையை காப்பாற்றுவதைவிட புகழ் தேடுவதே முக்கியமாக தெரிகிறது,” என கடுமையான விமர்சனம் செய்துள்ளார். இத்தகைய சம்பவங்களில் உதவி செய்வதைவிட வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டும் மனப்பான்மை குறித்து சமூகத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

.