மூட்டு வலி, இடுப்பு வலியை விரட்டும்.. அசத்தலான அடை.! மாத்திரைகளை தூக்கி போடுங்க.!



Ragi spinach adai dosai 

சமீப காலமாக வயதானவர்களுக்கு மட்டுமின்றி 30 வயதை தாண்டியவர்களுக்கு கூட மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலியும், இடுப்பு வலியும் தான். இதற்கு முக்கிய காரணம், உடலில் கால்சியம் சத்து குறைவது. அப்படி கால்சியம் சத்துக்களை பெற மருத்துவமனைகளுக்கு சென்று கால்சியம் மாத்திரைகளை நாம் எடுத்துக் கொள்கிறோம். 

ஆனால் இயற்கையான வழியிலேயே கால்சியம் சத்துக்களை பெற முருங்கைக் கீரையும், கேழ்வரகும் பெருமளவில் உதவுகிறது. இவை, இரண்டையும் கொண்டு எப்படி சுவையான அடை செய்யலாம் என்று பார்க்கலாம்.

ragi

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - ஒரு கப், 
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், 
உப்பு - 1/2 டீஸ்பூன், 
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 1/2 கப்,
முருங்கைக்கீரை - 1 கப்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய் - 1/4 கப்,
எள்ளு - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1/2 கப்,
நல்லெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

அரிசி மாவு மற்றும் ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். அதன் பின் துருவியை இஞ்சி, முருங்கைக்கீரை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், எள், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்போது தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு திரண்டவுடன், அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும். 10-20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் இந்த மாவில் அடை செய்து சாப்பிடலாம். சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை, கேழ்வரகு அடை ரெடி.!