கோவில் திருவிழாக்கள் ஏன் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது.?! இது தான் காரணமா.?!

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள். அழகு, செல்வம், காதல், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்வுகளை குறிக்கக் கூடியது சுக்கிரன்.
எனவே, வெள்ளிக்கிழமை மங்களகரமானதாகவும், சுப காரியங்கள் செய்த செய்ய உகந்த நாளாகவும் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அம்மன் கோவில் சம்பந்தப்பட்ட பூஜைகளும், வழிபாடுகளும் வெள்ளிக்கிழமைகளில் தான் நடைபெறும்.
இந்த வெள்ளிக்கிழமையானது வாரத்தின் இறுதி நாளாகவுள்ளது. மேலும், வார இறுதி நாட்களின் துவக்கமாக இருப்பதால் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நாளாக உலகெங்கிலும் பார்க்கப்படுகிறது. எனவே, தான் தமிழர்கள் திருவிழாக்களை கொண்டாட வெள்ளிக்கிழமையை ஏற்ற நாளாக கருதுகின்றனர்.
இந்த வெள்ளி கிழமை செல்வ செழிப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உகந்த நாளாக இருக்கிறது என்பதாலேயே, இந்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.