தினம் தினம் டார்ச்சல்... சமையல் முதல் துணி துவைப்பது வரை ஒரே குறைகள்! ஆத்திரம் தாங்க முடியாமல் மாமியாரை ஒரே போடாய் போட்ட மருமகள்..... அதிர்ச்சி சம்பவம்!!!



daughter-in-law-killed-mother-in-law-uttarpradesh

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கர்னவாலா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மாமியாரை மருமகள் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கமல் என்பவர் தனது மனைவி பிரீதி மற்றும் தாயுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கமல் மதிய உணவை முடித்துவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த குழந்தைகளும் டியூஷனுக்குச் சென்ற நிலையில், மாமியாரும் மருமகளும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

மாலை நேரத்தில் கணவர் கமலுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரீதி, அம்மா படியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பதற்றமடைந்த கமல் உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அங்கு அவரது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட மனைவி.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததால், அவர் சந்தேகமடைந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் பிரீதியிடம் விசாரித்தபோது, அவரது பதில்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் மேலும் வலுத்த நிலையில், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

killed

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பிரீதியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மாமியாரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ததாகவும் பிரீதி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமையல் செய்வது, துணிகளைத் துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகள் தொடர்பாக மாமியார் அடிக்கடி தன்னை திட்டியதாகவும், சம்பவத்தன்று மழையில் இருந்த துணிகளை எடுக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை செய்ததாகவும் பிரீதி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: தந்தை–மகன் இடையே குடும்பத் தகராறு.. தந்தையால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஒடிசாவில் அதிர்ச்சி!