செல்போனை இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்.! அசத்தல் கண்டுபிடிப்பு.!

செல்போனை இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்.! அசத்தல் கண்டுபிடிப்பு.!


cell-phone-charging-in-air


பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி ஒரு புதிய வகை சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தொழில்நுட்பம் தொலைபேசியை சார்ஜிங் வயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். இந்த கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. 

 இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், பயனர்கள் தங்கள் மின்னணு சாதனங்களை தொலைவிலிருந்து சார்ஜ் முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பல சாதனங்களை வயர் இல்லாமல் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. இதை வெற்றிகரமாக சியோமி சந்தையில் அறிமுகம் செய்தால் அது வைரலாக பேசப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக 80 வாட்ஸ் வொயர்லெஸ் சார்ஜிங் வசதியை டெக் டெமோ செய்திருந்தது. அந்த வகையில் இதுவும் இருக்கக்கூடாது என்பது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முடிந்தவரை இதை டெமோ என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார் சியோமி செய்தி தொடர்பாளர் .