தமிழகம்

வேலை இல்லை! குடிக்க பணமில்லை என்பதற்காக இப்படியா? பட்டதாரி இளைஞனின் செயலால் ஆடிப்போன போலீசார்!

Summary:

youngbok broke atm machine for drink

அவன் வெளியேறிய நிலையில், ஏடிஎம் இயந்திரம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது சிசிடிவி கேமராவை உடைக்கும் முன்பு பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்பொழுது வாலிபர் ஒருவர் கடப்பாரையுடன் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். உடைக்க முடியாத நிலையில் அவர் திரும்பி சென்றுள்ளார. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு  கண்ணன் அந்த வாலிபர் சேலம் உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என கண்டறிந்தனர்.

atmக்கான பட முடிவுகள்

இதையடுத்து  போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் அவர், தான் பி.எஸ்.சி. பட்டதாரி. வேலை கிடைக்காமல்  விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், அதனால் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த தான் வாழ்க்கையில் நன்கு செட்டிலாக வேண்டும் என்பதற்காக ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.
 


Advertisement