தமிழகம்

உடற்பயியிற்சி கூடத்தில் ஆசை வார்த்தை கூறிய இளம்பெண்.! அவரை நம்பி ஏமார்ந்த பெண்கள்.! விசாரணையில் வெளியான பகீர் பின்னணி.!

Summary:

அதிக வட்டி தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா. 33 வயது நிரம்பிய இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். 

அவரது பேச்சை நம்பிய பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர். இவ்வாறு பல பெண்களிடம் நகை, பணத்தை பெற்ற சத்யா சில நாட்கள் வட்டி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது, பணம் கொடுத்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்து விசாரித்தபோது,  அவர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சத்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement