தமிழகம்

16 வயது சிறுமியை 600 பேர் சீரழித்த கொடூரம்.! மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

மதுரையில் அத்தையால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 16 வயது சிறுமி, இன்று அதிலிருந்து மீள முடியாமல் அடிமையாகி உள்ளார்.

மதுரையில், 16 வயது சிறுமி தவறான தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு 6 பிள்ளைகள் பிறந்தனர். இதில் 4வது பிள்ளைதான் 16 வயது சிறுமி. 

அந்த சிறுமிக்கு 10 வயதாக இருக்கும்போது தந்தை இறந்த நிலையில் பிள்ளைகளை பராமரிக்க தாய் சிரமப்பட்டார். கணவரின் தங்கையான ஜெயலட்சுமி, எனது பொறுப்பில் சிறுமியை வளர்க்கிறேன் என்றுக்கூறி, 2 ஆண்டுகளாக சிறுமியை வளர்த்துவந்த நிலையில், சிறுமி வயதுக்கு வந்தபின்னர் சிறுமியை, தனது தொழிலான பாலியல் தொழிலுக்கு அழைத்துச்சென்றார்.

கடந்த 3ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகள் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சிறுமியை மாதவாடகைக்கு விட்டுள்ளார். இந்தநிலையில், ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியிடம் குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாததை கண்டு போலீசார் வேதனை அடைந்தனர்.

இதனையடுத்து வேறு மனநிலையில் இருக்கும் சிறுமியை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுனர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என 600க்கும் மேற்பட்டோர் சிறுமியை சீரழித்தவர்கள் பட்டியலில் உள்ள நிலையில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.


Advertisement