சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
நடு ரோட்டில் பாம்பும் கீரிப்பிள்ளையும் சண்டை போடும் காட்சி! வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள்! இறுதியில் வெற்றி பெற்றது யாருன்னு பாருங்க! வைரலாகும் வீடியோ...
உத்தரபிரதேசம் மாநிலம் ஆரையா மாவட்டத்தில், சாலை நடுவில் பாம்பும் கீரிப்பிள்ளையும் மோதும் அதிர்ச்சி தரும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி நேரில் பார்த்த இந்த சம்பவம் பலரையும் பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வீடியோவில், ஒரு நாகப்பாம்பு தலையை உயர்த்தி தாக்க தயார் நிலையில் காணப்பட, மறுபுறம் அச்சமே இல்லாமல் கீரிப்பிள்ளை நெருங்கி, அதனை வேகமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. பாம்பு தாக்க முயற்சி செய்தபோதும், கீரிப்பிள்ளையின் அதிவேக அசைவுகள் அதனை தடுப்பதற்கே வாய்ப்பு கொடுக்கவில்லை. கடைசியில், பாம்பை வாயில் பிடித்து, சாலையோர நிலத்திற்கு இழுத்துச் செல்கிறது.
பொதுவாக, கீரிப்பிள்ளை பாம்புக்கு எதிராக வெற்றி பெறுவது சாதாரணமே. அதற்குக் காரணம், அதன் இயற்கையான விஷ எதிர்ப்பு சக்தி, துல்லியமான தாக்கங்கள் மற்றும் சிறந்த வேகம். ஒரு நொடியிலே நான்கு முறை தாக்கும் திறன் கீரிப்பிள்ளைக்கு இருக்கிறது என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.
இதையும் படிங்க: இது புதுசா இருக்கே.. சாலை விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர்! பாட்டு பாடிய எச்சரித்த காவலர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ...
இந்த வீடியோவைக் கண்டு பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ காட்சி...
सड़क पर ब्लैक कोबरा व नेवले की फाइट देख ठहर गया आवागमन
कोबरा और नेवले की फाइट का वीडियो सोशल मीडिया पर वायरल#Wildlife #SnakeVsMongoose #ViralVideo #AuraiyaNews pic.twitter.com/RwJmIQ9upB
— News1India (@News1IndiaTweet) July 17, 2025