பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு! எப்படி இருந்து மனுஷன்... இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா! அவரு என்ன சொல்றாரு பாருங்க.... கண்ணீர் வரவைக்கும் வீடியோ..!!!



rathika-bharathiraja-thai-kizhavi-national-award-reaction

‘தாய் கிழவி’ திரைப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா தெரிவித்த பாராட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் படம் பார்த்த அவர், நடிகை ராதிகா சரத்குமாரின் நடிப்பை சிறப்பாக பாராட்டியுள்ளார். இதையடுத்து இருவரும் சந்தித்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பு

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. எதார்த்தமான கதையும் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் இணைந்து படத்தை வெற்றியடையச் செய்தன. குறிப்பாக ‘பவுனு தாய்’ கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவின் நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

படம் வெளியான நேரத்தில் உடல்நலக்குறைவால் பார்க்க முடியாமல் இருந்த பாரதிராஜா, சமீபத்தில் அதை பார்த்துள்ளார். இதையடுத்து ராதிகா நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்த வாழ்த்து செய்தி! ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!!!

தேசிய விருது குறித்து பாரதிராஜா கருத்து

அந்த சந்திப்பின் போது, “படம் பார்த்தீர்களா? என் நடிப்பு எப்படி?” என்று ராதிகா கேட்டதாக தகவல். அதற்கு பதிலளித்த பாரதிராஜா, படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், இந்த அளவிலான நடிப்புக்கு ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகள் ராதிகாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

உருக்கமான பதில், வைரலான வீடியோ

தனது குருவின் பாராட்டை கேட்ட ராதிகா, “எனக்கு தேசிய விருது கிடைத்தால் அதை உங்கள் காலடியில் வைப்பேன்” என்று உருக்கமாக தெரிவித்தார். இந்த உரையாடல் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் ராதிகாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது வளர்ச்சியை பாராட்டியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில், பாரதிராஜா விரைவில் முழு உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் எனவும், ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.