ஏறுன நிமிஷத்தில வேலையை முடிச்சுட்டு இறங்கிட்டாரு! பாவம் அந்த பையனுக்கு ஒன்னும் தெரியல.... பதற வைக்கும் ரயில் திருட்டு வீடியோ..!!!
ரயில் நிலைய நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் இருந்து பொருட்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதில், பாக்கெட்டில் இருந்த மொபைல் எப்படி கண் இமைக்கும் நேரத்தில் திருடப்படுகிறது என்பதைக் காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சி பயணிகளிடையே அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
நெரிசலை சாதகமாக்கும் திருடன்
வீடியோவில், ஒரு ரயில் பிளாட்பாரத்தில் நின்றபோது பயணிகள் அவசரமாக ஏற முயலும் சூழல் தெரிகிறது. அந்த குழப்பத்திலேயே, ஒருவர் பயணியுடன் சேர்ந்து ஏறும் போல் நடிக்கிறார். ஆனால், அடுத்த நொடியில் அவர் உண்மையான நோக்கம் வெளிப்படுகிறது.
இதையும் படிங்க: ஐயோ... பாக்கவே சகிக்கல! இத எப்புடி.... ஓடும் ரயிலில் டாய்லெட் அருகே நபர் செய்த அட்டூழியத்தின் அதிர்ச்சி வீடியோ..!!!
ஒரு விநாடி கவனச்சிதறல்
முன்னால் சென்ற பயணி ரயிலுக்குள் நுழையும் அந்த ஒரு சிறிய இடைவெளியில், திருடன் அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன்-ஐ மின்னல் வேகத்தில் எடுத்து விடுகிறான். அதன்பின் எந்த பதற்றமும் இல்லாமல், சாதாரணமாக கூட்டத்தில் கலந்துவிடுகிறான். இதனால், பொருள் பறிகொடுத்த பயணிக்கே சம்பவம் நடந்தது தெரியாமல் அவர் ரயிலுக்குள் சென்று விடுகிறார்.
எச்சரிக்கை விடுக்கும் நெட்டிசன்கள்
இந்த வீடியோ வெளியாகியதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ரயில் நிலையம் போன்ற கூட்டமான இடங்களில் சிறிய கவனக்குறைவும் பெரிய இழப்பாக மாறலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிக்கும் போது தனிப்பட்ட பொருட்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
நெரிசல், அவசரம் போன்ற சூழ்நிலைகள் திருடர்களுக்கு சாதகமாக மாறும் நிலையில், பயணிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம் என இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
ट्रेन में चढ़ते समय चोर कैसे फोन और पर्स चोरी करते है।आखिर इसको कैसे रोक जाए? pic.twitter.com/rAXsdoGTw7
— Mohit Kumar Jha (Sangam) (@Mohitjhasangam) April 30, 2026
இதையும் படிங்க: பார்க்கும் போது பக்கு பக்குன்னு இருக்கு! மரணத்தின் நுனியில் ஊசலாடும் குழந்தை..... அசால்ட்டாக வேடிக்கை பார்க்கும் தந்தை! அதிர்ச்சி வீடியோ...!!!