CM விஜய்யின் தீபாவளி பரிசு! இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகும் தமிழக அரசு... எதிர்பார்பில் மக்கள்..!!!



november-women-entitlement-scheme-payment

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை நவம்பர் மாதத்திற்கான பணம் தீபாவளிக்கு முன்பாகவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக மாதத்தின் தொடக்கத்தில் வழங்கப்படும் ரூ.1,000 தொகை, பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கான மொத்தம் ரூ.2,000 ஒரே நேரத்தில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

20 நாட்கள் இடைவெளியில் ரூ.2,000 கிடைக்குமா?

வழக்கமான மாதாந்திரத் தொகையுடன் நவம்பர் மாதத்திற்கான பணத்தையும் முன்கூட்டியே சேர்த்து வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு வழங்கப்பட்டால், சுமார் 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு மாதங்களுக்கான தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2,000 பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படலாம். ஆனால், பணம் செலுத்தப்படும் தேதி மற்றும் தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இல் அதிரடி மாற்றம்..! தீவிரமாக நடக்கும் வேலை... அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

தீபாவளிக்கு முன்பாக பணம் வழங்கப்படுமா?

தீபாவளிப் பண்டிகைக்கான செலவுகள் அதிகரிக்கும் நிலையில், உரிமைத் தொகை முன்கூட்டியே கிடைத்தால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால், அரசு எப்போது அறிவிப்பு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பேசப்படும் 'தீபாவளி பரிசு'

இதற்கிடையே, மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்படுவது முதலமைச்சர் விஜய்யின் தீபாவளிப் பரிசு எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'CM விஜய்யின் தீபாவளி பரிசு' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், இரண்டு மாதங்களுக்கான தொகை ஒரே நேரத்தில் வழங்கப்படுமா, எப்போது வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என்பது குறித்து அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே உறுதியாகத் தெரியும்.

 

இதையும் படிங்க: BREAKING: மகளிர் உரிமை தொகை ரூ.2,500-ஆக உயர்வு..? வங்கி கணக்குகள் சரிபார்ப்பு... வெளியான முக்கிய தகவல்...!!!