இளம்பெண்ணை கடத்தி அடர்ந்த காட்டில் அடைத்து... கண்டப்படி கத்தியால் கீறிய வாலிபர்! அலறி துடித்த பெண்... இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்..! ஷாக் வீடியோ..!!!
நேபாளத்திற்குச் சென்ற பெண் ஒருவரைக் கடத்தி அடர்ந்த காட்டுப் பகுதியில் அடைத்து வைத்த நபர், அந்தச் செயலை வீடியோவாகப் பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டதால் போலீசாரிடம் சிக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த நபரைக் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணையும் மீட்டுள்ளனர்.
பெண்ணைக் கடத்தி காட்டுப் பகுதியில் அடைத்த நபர்
நேபாளத்திற்குச் சென்ற பெண் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அடைத்து வைத்துள்ளார். தான் செய்த செயலை அந்த நபரே வீடியோவாகப் பதிவு செய்து தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நல்லது செஞ்ச பொண்ணுக்கு இப்படி ஒரு பேரா..? தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்ட இந்திய பெண்..!!!
வைரலான வீடியோ மூலம் அடையாளம் கண்ட போலீசார்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைக் கவனித்த காவல்துறையினர், வீடியோவில் இருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, வீடியோவைப் பதிவிட்ட நபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
குற்றவாளி கைது; பெண் பத்திரமாக மீட்பு
இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற போலீசார், அந்த நபரைக் கைது செய்தனர். காட்டுப் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பத்திரமாக மீட்டனர். குற்றச்செயலைத் தானே வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டது, அந்த நபரைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு முக்கியத் தடயமாக அமைந்தது.
குற்றத்தைப் பதிவு செய்த வீடியோவே குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக மாறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
🚨 صدمة في نيبال 🇳🇵
— أ. راكان (@Hopeet_t13) October 29, 2026
سائحة أجنبية تعرضت للاختطاف خلال رحلتها السياحية في نيبال على يد رجل مسلح
حيث اقتادها إلى إحدى الغابات في واقعة صادمة.
لكن المثير للصدمة أن المتهم وثّق جريمته بمقطع فيديو ونشره على تيك توك
في تصرف ساهم في كشف هويته بعد انتشار المقطع على نطاق واسع وتحوله…
இதையும் படிங்க: தாய் சொன்ன சாதாரண வார்த்தை...! ஆனால் 15 வயது சிறுமி எடுத்த அதிர்ச்சி முடிவு..... கதறும் குடும்பத்தினர்...!!!