தாய் சொன்ன சாதாரண வார்த்தை...! ஆனால் 15 வயது சிறுமி எடுத்த அதிர்ச்சி முடிவு..... கதறும் குடும்பத்தினர்...!!!



hyderabad-15-year-old-student-dies-by-suicide

ஹைதராபாத் கோகாபேட் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், 15 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்த லாஸ்யா லஹரி, குடியிருப்பின் 23வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். படிப்பு தொடர்பான மனஅழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயின் அறிவுரையால் மன உளைச்சலா?

கோகாபேட் பகுதியில் உள்ள பிரெஸ்டீஜ் அடுக்குமாடிக் குடியிருப்பில் லாஸ்யா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கல்லூரிக்குச் சென்று முறையாகப் படிக்க வேண்டும் என அவரது தாய் அறிவுறுத்தியதாகவும், இதனால் மாணவி மனமுடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து குடியிருப்பின் 23வது மாடிக்குச் சென்ற அவர், அங்கிருந்து கீழே குதித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அதிகாலை 2:30 மணிக்கு காதலனுக்கு வீடியோ கால் செய்த காதலி! அடுத்த 3 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி... பதறவைக்கும் பின்னணி!!!

உடலை மீட்டு போலீசார் விசாரணை

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உண்மையான காரணம் குறித்து விசாரணை

படிப்பு அழுத்தம் காரணமாக மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுவே முழுமையான காரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மாணவியின் குடும்பத்தினர் மற்றும் கல்லூரி தொடர்பான விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் உயிரிழப்புக்கான உண்மையான பின்னணி தெரியவரும்.

 

இதையும் படிங்க: மக்களே உஷார்... சுடுதண்ணீர் எடுக்கும்போது 26 வயது இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்...! தாயை இழந்து தவிக்கும் 1 வயது பிஞ்சு குழந்தை... பகீர் சம்பவம்!!!