சிம்புவின் அரசன் படத்தில், "ராஜன் வகையறா"- வெற்றிமாறன் ஏமாற்றமாட்டார்... ரசிகர்கள் சுவாரசியம்.!
சிம்புவின் அரசன் படத்தில், "ராஜன் வகையறா"- வெற்றிமாறன் ஏமாற்றமாட்டார்... ரசிகர்கள் சுவாரசியம்.!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்த படம் வடசென்னை படத்தைப் போலவே ஒரு ரா மற்றும் ரியலிஸ்டிக் ஸ்டைலில் உருவாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும், அந்த படத்தில் நடித்த ஆண்ட்ரியா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் இதில் இணைந்துள்ளனர். சமீபத்தில், சமுத்திரகனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் ‘வடசென்னை’ படக்குழுவை சேர்ந்த பலர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: கொண்டாடும் ரசிகர்கள்! ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியீடு! ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில்! அதிரடி வீடியோ இதோ!
சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், சிம்பு இரண்டு விதமான கெட்டப்பில் தோன்றியிருந்தது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. மேலும், விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இதில் இணைந்திருப்பதாக கூறப்படுவது படத்துக்கு கூடுதல் ஹைப் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெற்றிமாறன் நிச்சயம் பூர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது.