தமிழகம்

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர உறவினர்கள்! விசாரணையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

Summary:

young girl abused

விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் இருந்துள்ளார். மனவளர்ச்சி குன்றிய அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார் சிறுமியின் பெற்றோர். 

ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் பெற்றோருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணையில், சிறுமியின் உறவினர்கள் இருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது .

அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அண்ணன் முறையான கணேசன் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement