தமிழகம்

மாயமான இளம் பெண் மருத்துவர்! இரண்டு நாட்கள் கழித்து பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Young doctor married lover in chennai

சென்னையை சேர்ந்தவர்கள் இளங்கோ - ஆண்டாள் தம்பதியினர். இவர்களது மகள் பெயர் சுபாஷினி. இவர் ரஷ்யாவில் மருத்துவம் பயின்றுவிட்டு பாண்டிச்சேரியில் தனியாக அறையெடுத்து தங்கி அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் சுபாஷினிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய மாப்பிளை தேடியுள்ளனர். மேலும், தனது மகளுக்கு பெற்றோர் போன் செய்தபோது அவரது போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. மகளிடம் இருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் பற்றமடைந்த பெற்றோர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றுபார்த்தபோது அவரது அறை பூட்டப்பட்டிருந்தது.

வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்று கேட்டால் அவர் வேலைக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகள் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் சுபாக்ஷினி அகிலன் என்பவரை திருமணம் செய்துகொண்டு தனது காதல் கணவருடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தனது காதலை பெற்றோரிடம் கூறியும் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் தான் ஆசைப்பட்ட நபரை திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், போலிசார் சுபாக்ஷிணியிடம் சமாதானம் பேசியுள்ளனர். அவர் தனது கணவன் கூடத்தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை கணவருடன் அனுப்பி வைத்து வழக்கை முடித்துவைத்தனர்.


Advertisement