தங்கையை காதலித்து தலைமறைவான இளைஞன்! அதன் பின் நடந்த துயர சம்பவம்.!young-couple-suicide

சென்னை, திண்டிவனம் அருகே உள்ள எறையானூர் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்ற 18 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அபிநயா என்ற 16 வயது மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிய நிலையில், திண்டிவனம் அடுத்துள்ள கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicideஇதற்கிடையில், உயிரிழந்த அருணாச்சலம் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.