வெளிநாட்டில் இருந்து திருமணம் செய்து கொள்ள சொந்த ஊருக்கு வந்த இளைஞர்.! அடுத்தநாளே குடும்பத்தார் கண்ட பேரதிர்ச்சி.!



young boy suicide in kanniyakumari


கன்னியாக்குமரி மாவட்டம் மாடத்தட்டுவிளையை சேர்ந்த கிறிஸ்டோ செபாஸ்டின் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், கிறிஸ்டோ செபாஸ்டினுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருமணத்துக்காக கடந்த 23ம் தேதி கிறிஸ்டோ செபாஸ்டின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றிருந்தனர். வீட்டில் கிறிஸ்டோ செபாஸ்டின் மட்டும் தனியாக இருந்துள்ளார். கோவிலுக்கு சென்று சிறிது நேரத்தில் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினர். ஆனால் அவர்களது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் பின்பக்க வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது கிறிஸ்டோ செபாஸ்டின் தூக்கில் தொங்கியுள்ளார்.

suicideஇதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிறிஸ்டோ செபாஸ்டினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோ தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.