தமிழகம்

மாங்காய் பறிப்பதற்காக ஏறிய சிறுவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! நொடிப்பொழுதில் நடந்த துயரச் சம்பவம்.!

Summary:

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் கங்கையம்மன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு 11 வயத

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் கங்கையம்மன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு 11 வயதில் மதன் என்ற மகன் இருந்துள்ளார். மதன், அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்தநிலையில் மதன் நேற்று தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் விளையாடி கொண்டு இருந்துள்ளான். 

அப்போது மாந்தோப்பின் அருகில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி, மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயன்றுள்ளான் சிறுவன் மதன். அப்போது அருகில் இருந்த மின்மாற்றியில் எதிர்பாராதவிதமாக சிறுவனின் கைபட்டு  அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளான் சிறுவன் மதன். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக மதனின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மின்சாரம் பாய்ந்து பலியான மதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement