திடீரென கேட்ட அலறல் சத்தம்.. கதறிய குழந்தைகள்.. குடிகார கணவனால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை..

திடீரென கேட்ட அலறல் சத்தம்.. கதறிய குழந்தைகள்.. குடிகார கணவனால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை..


Women commit suicide near Ariyalur

குடித்துவிட்டு தொல்லை செய்த கணவனால் இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி என்ற கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி ரஞ்சனி(வயது 30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான லாரன்ஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

ரஞ்சனி பலமுறை சொல்லியும் லாரன்ஸ் கேப்பதாக இல்லை. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் லாரன்ஸ் மதுகுடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ரஞ்சனி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீ பற்றியதும் ரஞ்சனி அலறியுள்ளார். தாய் தீயில் எரிவதை பார்த்து குழந்தைகள் கதறியுள்ளனர். இந்நிலையில் இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரஞ்சனியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை நடைபெற்றுவந்த நிலையில் ரஞ்சனி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரஞ்சனியின் கணவர் லாரன்ஸ் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.