தமிழகம்

சுய உதவிக்குழு கடனை அடைக்க தாமதமானதால் ஆபாச அர்ச்சனை.. பெண் விஷம் குடித்து பரிதாப பலி.!

Summary:

சுய உதவிக்குழு கடனை அடைக்க தாமதமானதால் ஆபாச அர்ச்சனை.. பெண் விஷம் குடித்து பரிதாப பலி.!

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வருபவர் வேலு. இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். வேலுவின் மனைவி சரண்யா (வயது 32). சரண்யா அப்பள கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

இந்நிலையில், சரண்யா அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு நடந்தும் சாந்தியிடம் ரூ.1 இலட்சம் சீட்டு போட்டிருந்த நிலையில், சீட்டு பணத்தை எடுத்து சில மாதமாக பணம் செலுத்த இயலாமல் வறுமையில் வாடியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சரண்யாவின் வீட்டிற்கு சென்ற சாந்தி, பணம் கேட்டு அவதூறான வார்த்தைகளை பேசி இருக்கிறார். 

இதனால் மனமுடைந்துபோன சரண்யா எறும்பு பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement