பள்ளிப்பருவ காதல் திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ச்சி.. அப்பாவி கணவன் கொடூர கொலை.!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை கொலை செய்த பெண் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
தனியார் நிறுவன ஊழியர்:
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தேவதாசனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35). ஆந்திரப்பிரதேசம் மாநிலம், சித்தூர் மாவட்டம், போயனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஹாசினி (வயது 30). தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய மௌனிகா என்ற மகள் இருக்கிறார். ஓசூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ரமேஷ், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: பள்ளிப்பருவ காதலால் விபரீதம்.. கள்ளகாதலுக்காக கணவருக்கு மர்டர் ஸ்கெட்ச்.. தமிழக இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!
வெட்டிக்கொலை:
இதனிடையே, கடந்த 13ம் தேதி ஹாசினி, கணவர் ரமேஷ், குழந்தை மௌனிகா ஆகியோர் ஹாசினியின் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின் ௧௪ம் தேதியன்று மல்லப்பா மலையில் இருக்கும் கோயிலுக்கு மூவரும் புறப்பட்டுச் சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மலைக்கோயிலில் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

காதலுக்கு எதிர்ப்பு:
கொலை சம்பவத்துக்குப்பின் வனப்பகுதியில் பதுங்கியிருந்த காசினி, கங்காதர் உள்ளிட்ட 6 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் காசினி அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஹாசினியும் - கங்காதரும் பள்ளியில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் ஹாசினியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரமேஷுடன் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.
கள்ளக்காதல்:
திருமணத்துக்குப்பின் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த காசினி ஓராண்டாக அங்கேயே இருந்துள்ளார். அச்சமயம், ஹாசினி - கங்காதர் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் பல நேரம் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கணவரின் வீட்டுக்குச் சென்றபின்னரும் கள்ளக்காதல் தொடர்பால் கணவரை கொலை செய்ய காசினி திட்டமிட்டு இருக்கிறார்.
கைது:
சம்பவத்தன்று இவர்களின் திட்டப்படி மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில், லைவ் லொகேஷன் ஷேர் செய்தபடி காசினி பயணித்து இருக்கிறார். இதனை பயன்படுத்தி கங்காதர் மற்றும் அவரின் நண்பர் ரமேஷை கொலை செய்துள்ளனர். ஹாசினியும் குழந்தையுடன் தப்பிச் சென்ற நிலையில், தற்போது கைதாகி இருக்கிறார். தலைமறைவாக உள்ள 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கசந்த காதல்.. இன்சூரன்ஸ் பணத்துக்காக கள்ளக்காதலனுடன் கணவனுக்கு சமாதி கட்டிய மனைவி.!