தமிழகம்

கணவனை கொலை செய்துவிட்டு காதலனுடன் வாழ மனைவி போட்ட பிளான்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

wife planned to kill her husband

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு காய்த்ரி என்ற மனைவி உள்ளார். புகைப்பட கலைஞரான கணேஷ் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் புகைப்படம் எடுக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் திடீரென்று கீழே விழுந்துவிட்டதால், தலையில் பலமாக அடிபட்டுள்ளது.

இதனால் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கணேஷை உடனடியாக மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கணேஷுக்கு நினைவு திரும்பவேயில்லை. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கணேஷ் தற்போது வரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டிலில் இருந்து கீழே விழுந்தால் எப்படி இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டும்? யாரோ பயங்கரமாக மண்டையில் அடித்திருப்பது போன்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரது மனைவி காயத்ரியிடம் விசாரணையை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. காயத்ரிக்கும் யாசின் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்து வந்துள்ளனர். இதற்கு கணவர் கணேஷ் முட்டுக்கட்டையாக இருப்பதால், அவரை தீர்த்து கட்ட காயத்ரி முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தனது கணவனை கொலை செய்வதற்காக கூலிப் படைக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று கணேஷ் தூங்கியதும், யாசினுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அங்கு கூலிப்படையுடன் வந்த யாசின், கணேஷை அடித்து தாக்கி உள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதுபோல சித்தரிக்கவே, உயிர் நாடியை நசுக்கி விட்டு சென்றுள்ளனர். கணவன் எப்படியும் இறந்துவிடுவார் என்று நினைக்க இறுதியில் சிக்கிக் கொண்டார். இதில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், காதலனான யாசின் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் அவரை வலைவீசி தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement