மாரடைப்பு என நாடகம்.. பிரேதப் பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை! பின்னணியில் இருந்த மகன், மனைவி... பகீர் சம்பவம்!!!



wife-and-son-killed-husband-in-perungudi

பெருங்குடியைச் சேர்ந்தவர் சிவபாதம் (வயது 70). ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநரான இவருக்கு பெருங்குடி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் வாடகை வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடுகளின் வாடகை வருவாயை வைத்து குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

சிவபாதத்தின் மகன் மதுசூதனன் (39), பொறியியல் படித்தவர். தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு விட்டு பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிவபாதத்துக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததால் மருத்துவச் செலவுகளும் அதிகரித்ததாக தெரிகிறது.

இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சிவபாதம் வீட்டை விட்டு வெளியேறி, வாலாஜாபாத் அருகே உள்ள மருதம் கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ரேணுகாவும், மதுசூதனனும் அங்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

chennai

அப்போது, சென்னைக்கு திரும்பி வருமாறும், வாடகை பணத்தை தங்களுக்கு வழங்குமாறும் அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிவபாதம் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டால் தனது சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விடுவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில், மதுசூதனன் கத்தியால் சிவபாதத்தை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவபாதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பின்னர் ரேணுகா ரத்தக்கறைகளை சுத்தம் செய்துவிட்டு, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் சிவபாதத்தின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மதுசூதனன் மற்றும் ரேணுகாவை போலீசார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்.. பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!