மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
காலையிலேயே பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தனியார் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீரென ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நாகர்கோவில், ஊட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், தொழிலில் நஷ்டம் ஏற்படுவதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசிடம் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுதொடர்பான முடிவு தாமதமாகி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்து கட்டணம் உயர்வு? விரைவில் உயர்மட்ட குழு கூட்டம்!

இந்த நிலையில், கடலூர், வேலூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் ரூ.2 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அரசு செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி சில பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு, தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கட்டண உயர்வு குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனியார் பேருந்து கட்டணம் உயர்வு? விரைவில் உயர்மட்ட குழு கூட்டம்!