அதற்கு ஒத்துழைக்காத கள்ளகாதலியின் கண்களை சேதப்படுத்திய கள்ளக்காதலன்.. கதறலில் பதறிப்போன அக்கம் பக்கம்.. பகீர் சம்பவம்.!

அதற்கு ஒத்துழைக்காத கள்ளகாதலியின் கண்களை சேதப்படுத்திய கள்ளக்காதலன்.. கதறலில் பதறிப்போன அக்கம் பக்கம்.. பகீர் சம்பவம்.!


Virudhunagar Rajapalayam Affair Man Damaged Affair Woman Eye She Couldnot give Money Alcohol

மதுகுடிக்க பணம் தர மறுத்த கள்ளகாதலியின் கண்களை கட்டிங் பிளேடால் கயவன் சேதப்படுத்திய படுபயங்கரம் இராஜபாளையம் நகரையே அதிர வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், ஆவரம்பட்டி அழகுதேவன்குளம் சாலையில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரின் மனைவி ராஜலட்சுமி (வயது 28). தம்பதிகள் இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடானது ஏற்பட்டுள்ளது. 

இதனால் கணவரை பிரிந்த ராஜலட்சுமி, மகள்களோடு தனியே வசித்து வருகிறார். ராஜலட்சுமியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் மனவேதனையடைந்த அவரின் பெற்றோரும் மகளுடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். 

இவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், அவரின் மனைவி தங்கமாரி தனது 2 குழந்தையை அழைத்துக்கொண்டு தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் மணிகண்டன் - ராஜலட்சுமி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

Virudhunagar

இதனைத்தொடர்ந்து, இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் சேர்ந்து வாழவும் தொடங்கியுள்ளனர். மதுபழக்கத்தை விடாத மணிகண்டன், தினமும் மது அருந்திவிட்டு கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருப்பது, தகராறு செய்வது என இருந்து வந்துள்ளார். 

ஒருகட்டத்தில் மணிகண்டனின் செயல் ராஜலட்சுமிக்கு விரக்தியை ஏற்படுத்திய நிலையில், வேலைக்கு செல்லாமல் மணிகண்டன் குடித்து வந்துள்ளார். இதனை ராஜலட்சுமியிடம் தட்டிக்கேட்ட நிலையில், மேற்படி குடிக்க பணம் வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். 

அவர் பணம் தர மறுத்ததால் வீட்டில் இருந்த கட்டிங் பிளேடை எடுத்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ராஜலட்சுமியின் 2 கண்களிலும் காயம் பட்டுள்ளது. வலி தாங்க இயலாத பெண்மணி கதறவே, அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்துள்ளனர். 

Virudhunagar

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தப்பியோட, கண்களில் இரத்தம் வழிந்த நிலையில் இருந்த ராஜலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.